ஜப்பானியத் துல்லியத்துடன் முன்னணி நோய்த் தடுப்புச் சுகாதாரம்
NURA மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பத்தையும் மருத்துவ நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து நோய்த் தடுப்புச் சுகாதாரத்திற்குப் புதிய வரைவிலக்கணம் வழங்குகிறது.
இலங்கையின் முதலாவது AI இனால் இயங்கும் சுகாதாரப் பரிசோதனை மையமான NURA, வெறுமனே 120 நிமிடங்களில் முழுமையான சுகாதாரப் பரிசோதனை அனுபவத்தை வழங்க நுண்ணறிவுமிக்க புகைப்படவியல் மற்றும் ஜப்பானிய பொறியியல் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஒன்றிணைக்கிறது.


இலங்கையின் முதலாவது AI இனால் இயக்கப்படும் சுகாதாரப் பரிசோதனை மையமான NURA, நுண்ணறிவுள்ள புகைப்படவியல் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்களில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள Fujifilm மற்றும் சுகாதார விசேடத்துவம் வாய்ந்த ஆழமான பாரம்பரியத்தை கொண்ட நம்பிக்கைக்குரிய நிறுவனமான Dr. Kutty’s Healthcare ஆகியவற்றின் கூட்டுறவின் விளைவாக உருவானதாகும்.
ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் மற்றும் நோய்த் தடுப்புப் பராமரிப்பை ஊக்குவிக்கும் கூட்டு தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட எமது பங்களிப்பானது, ஜப்பானின் பல தசாப்த கால பரிசோதனை நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளை நோயாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையுடன் ஒன்றிணைக்கிறது.
NURA ஆகிய நாம், மக்கள் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை வாழ உதவுவதற்காக உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம், மருத்துவ விசேடத்துவம் மற்றும் ஜப்பானிய விருந்தோம்பல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, மேம்பட்ட சுகாதார பரிசோதனையை இலகுவாக அணுகக்கூடியதாகவும், துல்லியமாகவும், நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எமது பணிநோக்கு
நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதற்கான AI மற்றும் மேம்பட்ட பரிசோதனைகளைப் பயன்படுத்தி நோய் தடுப்புச் சுகாதாரப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்துவதுடன், மக்கள் ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை வாழ உதவுதல்.
"நோய் கண்டறிதலே மிகச் சிறந்த பராமரிப்பு செயலாகும். அனைவரும் அணுகக்கூடிய வகையில் நாம் NURA வை உருவாக்கியுள்ளோம்."
NURA நிறுவுனர்கள்
எமது தொலைநோக்கு
உயர்தர ஆரம்பகட்ட நோய் கண்டறிதலை இலகுவாக அணுகக்கூடியதாகவும், திறனானதாகவும், நோயாளர்களை மையப்படுத்தியதாகவும் மாற்றியமைத்து, AI இனால் இயங்கும் நோய்த் தடுப்புச் சுகாதாரப் பரிசோதனையில் உலகளாவிய தலைவராக உருவெடுத்தல்.
துல்லியம்
மில்லிமீற்றருக்கும் குறைந்த துல்லிய அளவீட்டுடன் கூடிய AI இனால் மேம்படுத்தப்பட்ட பரிசோதனை.
திறன்
120 நிமிடங்களுக்குள் 15 இற்கும் மேற்பட்ட உறுப்புகளின் முழுமையான பரிசோதனை.
அணுகல் முறை
இலங்கை முழுவதும் உலகத்தரம் வாய்ந்த நோய்த் தடுப்புச் சுகாதாரத்தை கிடைக்கச் செய்தல்.
நம்பகத்தன்மை
நிறுவனத்தின் உலகளாவிய ரீதியான நம்பகமான ஜப்பானியத் தொழில்நுட்பத்தால் இயங்குகிறது.
கனவு நனவான கதை
ஒவ்வொரு கட்டமும் எமது நிபுணர் குழுவால் வழிநடத்தப்படுகிறது. காத்திருப்பு இல்லை. குழப்பம் இல்லை. துல்லியமானதும் திறனான பராமரிப்பும்.
2018
அடித்தளம்
உலகளாவிய மக்களுக்கு மேம்பட்ட நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனையைக் கிடைக்கச் செய்வதற்கான முக்கிய தொலைநோக்குப் பார்வையை உருவாக்கியது.
2019
ஜப்பானிய கூட்டணி
FUJIFILM நிறுவனத்தின் அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்பத்தை DKH Healthcare இன் பரந்த மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒன்றிணைத்து ஒரு மூலோபாயக் கூட்டுத் திட்டத்தை அமைத்தது.
2021–2022
முதல் மையம் மற்றும் நாடு தழுவிய விரிவாக்கம்
இந்தியாவில் முதல் NURA மையம் திறக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் முக்கிய பெருநகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2024
சர்வதேச சந்தையில் அறிமுகம்
NURA-வின் புதுமையான சுகாதாரப் பரிசோதனை முறையை உலகின் முக்கிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், திட்டமிட்ட சர்வதேச விரிவாக்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
2027
இலங்கையின் முதல் NURA மையம்
கொழும்பில் முதல் NURA மையத்தைத் திறப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான NURA-வின் தடுப்பு சுகாதாரப் பரிசோதனை சேவைகள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சமூகத்தினர் ஆரம்பகட்ட நோயறிதல் பரிசோதனைகளை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

2018
அடித்தளம்
உலகளாவிய மக்களுக்கு மேம்பட்ட நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனையைக் கிடைக்கச் செய்வதற்கான முக்கிய தொலைநோக்குப் பார்வையை உருவாக்கியது.
2019
ஜப்பானிய கூட்டணி
FUJIFILM நிறுவனத்தின் அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்பத்தை DKH Healthcare இன் பரந்த மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒன்றிணைத்து ஒரு மூலோபாயக் கூட்டுத் திட்டத்தை அமைத்தது.
2021–2022
முதல் மையம் மற்றும் நாடு தழுவிய விரிவாக்கம்
இந்தியாவில் முதல் NURA மையம் திறக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் முக்கிய பெருநகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2024
சர்வதேச சந்தையில் அறிமுகம்
NURA-வின் புதுமையான சுகாதாரப் பரிசோதனை முறையை உலகின் முக்கிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், திட்டமிட்ட சர்வதேச விரிவாக்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
2027
இலங்கையின் முதல் NURA மையம்
கொழும்பில் முதல் NURA மையத்தைத் திறப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான NURA-வின் தடுப்பு சுகாதாரப் பரிசோதனை சேவைகள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சமூகத்தினர் ஆரம்பகட்ட நோயறிதல் பரிசோதனைகளை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
NURA ஏன் தனித்துவமானது?
வேகமான, புத்திசாலித்தனமான நோய்த் தடுப்புச் சுகாதார அனுபவத்திற்காக கருணைமிக்க பராமரிப்புடன் இணைந்த துல்லியமான ஜப்பானிய தொழில்நுட்பம்.
AI + ஜப்பானிய தொழில்நுட்பம்
உண்ணாதிருக்க தேவையில்லை, மருத்துவர் பரிந்துரை தேவையில்லை
120 நிமிடத்தில் பூரண அனுபவம்
15 + முக்கிய உறுப்புகள் பரிசோதிக்கப்படுகின்றன
உடனடி மருத்துவ ஆலோசனை

எமது தொழில்நுட்பம்
உலகளாவிய ரீதியில் சான்றளிக்கப்பட்ட ஜப்பானிய AI துல்லியம்.
Fujifilm AI புகைப்படவியல்:
ஒருங்கிணைந்த AI பகுப்பாய்வு கொண்ட Multi-slice CT ஸ்கேன், ஜப்பானிய உயர் மட்டப் பரிசோதனை மருத்துவமனைகளுக்கு இணையான துல்லியத்துடன் ஒரே நேரத்தில் 15 உறுப்புகளில் ஆரம்ப கட்ட அசாதாரண நிலைகளைக் கண்டறிகிறது.
மிகக் குறைந்த கதிர்வீச்சு:
எமது CT ஸ்கேனர்கள் பாரம்பரிய கட்டமைப்புகளை விட 97% வரை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன. இது வருடாந்த முழு உடல் பரிசோதனையை பாதுகாப்பானதாகவும் நோய்த் தடுப்புச் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றுகிறது.
உடனுக்குடனான அறிக்கை தயாரிப்பு:
AI இனால் உருவாக்கப்பட்ட அறிக்கைகள் எமது நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு 120* நிமிடங்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன — நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய மொழியில் எழுதப்பட்டு, உடனடி ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
எங்கள் கதையைப் பாருங்கள்
ஜப்பானிய துல்லியமும் கருணை மிக்க பராமரிப்பும் சந்திக்கும் NURAவின் பயணத்தை கண்டறியுங்கள்.
உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்.
NURA உடன் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு.
எமது கூட்டாளர்கள்

Fujifilm சுகாதார பராமரிப்பு
Fujifilm 1936 ஆம் ஆண்டில் எக்ஸ் கதிர் புகைப்படத்துடன் தனது சுகாதாரத் தொழில்துறையில் காலடி வைத்தது. அன்றிலிருந்து இன்று வரை வலிமையுடன் அது வளர்ந்து வந்துள்ளது.
எமது முழு நிறுவனத்தின் அனைத்துத் திறமைகளையும் தொழில்நுட்பங்களையும் தர்க்கரீதியான சுகாதார சேவைக்கு கொண்டு வருவதற்கான எமது பங்களிப்பும் உறுதியும் தொடர்ச்சியாக புத்தாக்கங்களைப் படைத்து மனிதர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து வருகின்றன.
கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூகத்தில் மேம்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க அதிநவீன பிரத்தியேக தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துகிறோம். உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.


Dr. குட்டியின் சுகாதார பராமரிப்பு
1985 ஆம் ஆண்டு கேரளாவில் வைத்தியர் வி.கே. குட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட Dr. Kutty’s Healthcare, மக்களை முதன்மைப்படுத்திய, கருணை மிக்க, தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்குதல் எனும் எளிய மற்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்குப் பார்வையினால் கட்டமைக்கப்பட்டது. அவரது கிராமத்தில் ஒரு சிறிய அறையில் ஒரு கிளினிக் ஆக ஆரம்பிக்கப்பட்ட இது, அதே அர்ப்பணிப்புடன் இன்று ஒரு நம்பிக்கைக்குரிய சுகாதார நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இன்று, Dr. Kutty’s Healthcare இந்தியா முழுவதும் பரந்த அளவிலான நோய் கண்டறிதல் மையங்களை இயக்குவதோடு, மத்திய கிழக்கிலும் சுகாதார சேவைகளை நிர்வகித்து வருகிறது. சுகாதாரத் துறைக்கு அப்பால், இக்குழுமம் கல்வி, ரியல் எஸ்டேட், ஏற்றுமதி - இறக்குமதி, பெருந்தோட்டம், விநியோகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் விரிவடைந்துள்ளது.
எமது ஒவ்வொரு நிறுவனத்திலும், சிறப்பான செயல்பாட்டிற்கான அர்ப்பணிப்பு, மக்களை முதன்மைப்படுத்தும் அணுகுமுறை, ஒப்பிட முடியாத அனுபவங்களை வழங்குவதில் தளராத அர்ப்பணிப்பு ஆகிய எமது நிறுவுனரால் நிறுவப்பட்ட பாரம்பரிய மதிப்புகள் மூலம் நாம் தொடர்ச்சியாக வழிநடத்தப்படுகிறோம்.
எங்கள் உள்ளூர் கூட்டாளர்


இன்னோவேட்டிவ் ஹெல்த் சொல்யூஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd., புதுமையான மருத்துவத் தொழில்நுட்பங்கள் மூலம் இலங்கையின் மருத்துவத் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுகாதாரப் பராமரிப்புத் தரத்தை உயர்த்துவதையும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு, மேம்பட்ட தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளை அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. புதுமை, அணுகல் வசதி மற்றும் தரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, உலகளாவிய மருத்துவ முன்னேற்றங்களையும் உள்ளூர் சுகாதாரத் தேவைகளையும் இணைப்பதை Innovative Health Solutions நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தனிநபர்களும் நிறுவனங்களும் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முன்கூட்டியே அக்கறையுடன் செயல்பட ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!
- NURA சுகாதாரப் பரிசோதனை என்றால் என்ன?
NURA என்பது இலங்கையின் முதலாவது AI தொழில்நுட்பத்தால் இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல., சுகாதாரப் பரிசோதனை மையமாகும். இது Fujifilm மற்றும் Dr. Kutty's Healthcare ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் FUJIFILM DKH நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரிவான பரிசோதனைகளை வழங்குகிறது. இந்தப் பொதுவாக 120 நிமிடங்களில்பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைவதுடன், நிகழ்நேர மருத்துவர் ஆலோசனையும் Digital Health Report-உம் வழங்கப்படுகின்றன.
- NURA சுகாதாரப் பரிசோதனையை நிறைவு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
NURA-வின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைகின்றன. இதில் AI-assisted Imaging, விரிவான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகியவை அடங்கும். நீங்கள் மையத்தை விட்டுச் செல்வதற்கு முன்பே உங்கள் Digital Health Report தயாராகிவிடும்.
- NURA எந்தெந்த வகையான புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்கிறது?
NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளைப் பரிசோதிக்கிறது. இதில் வாய், நுரையீரல், மார்பகம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், புரோஸ்டேட், கருப்பை முட்டைப்பை, கருப்பை வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அடங்கும். தேர்ந்தெடுக்கப்படும் Package-ஐப் பொறுத்து புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மாறுபடும். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விரிவான Packages-இல் அவர்களுக்கு உரிய புற்றுநோய் வகைகளுக்கான பரிசோதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- NURA சுகாதாரப் பரிசோதனை யாருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது?
முன்கூட்டியே கவனம் செலுத்தி, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பின் மூலம் தங்களுடைய உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேண விரும்பும் அனைவருக்காகவும் NURA வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது நோய் கண்டறியப்பட்டிருந்தாலோ, முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
- வழக்கமான சுகாதாரப் பரிசோதனையிலிருந்து NURA எவ்வாறு வேறுபடுகிறது?
NURA உங்கள் உடல்நிலை குறித்த ஆழமான புரிதலை வழங்குகிறது. AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட Ultra-Low-Dose CT Imaging, முக்கிய வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களுக்கான பரிசோதனைகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பொதுவாக 120 நிமிடங்களில்Screening மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகிய அனைத்தையும் NURA ஒருங்கிணைக்கிறது. இந்தப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து NURA மருத்துவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். NURA சிகிச்சை வழங்குவதோ மருந்துகளைப் பரிந்துரைப்பதோ இல்லை.
- NURA ஒரு மருத்துவமனையா?
இல்லை. NURA என்பது தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையமாகும். இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல.தங்களுடைய உடல்நலத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்த விரும்பும் பெரியவர்களுக்கான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளில் மட்டுமே NURA கவனம் செலுத்துகிறது. மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், தகுந்த நிபுணத்துவ சிகிச்சை வழங்குநர்களை அணுகுவதற்கான அடுத்தகட்ட வழிமுறைகளை NURA மருத்துவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
- NURA சுகாதாரப் பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு?
NURA சுகாதாரப் பரிசோதனைகளுக்கான கட்டணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் Package-ஐப் பொறுத்து மாறுபடும்.உங்களுக்கு விருப்பமான Package-க்கான தற்போதைய கட்டண விவரங்களை அறிந்துகொள்ள NURA Sri Lanka இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது NURA குழுவினரைத் தொடர்புகொள்ளவும்..
