Nura Logo

NURA வழங்கும் நிறுவனங்களுக்கான சுகாதாரப் பரிசோதனை

உங்கள் ஊழியர்களை வலுவூட்டும் வகையில் ஆரோக்கியமான மற்றும் சிறந்த உற்பத்தித்திறனை வழங்கக்கூடிய பணியாளர்களை பேண உங்கள் நிறுவனத்திற்கு நாம் உதவத் தயாராக உள்ளோம்.

நாம் வழங்கும் நிறுவனம் சார்ந்த விசேட பரிசோதனைத் தொகுப்புகள் ஊழியர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய இருசாராருக்கும் பரஸ்பர நன்மையளிப்பவையாகும். இவற்றை உங்களது தற்போதைய சலுகைகளுடன் இணைக்க முடியும் அல்லது தனியாகவும் வழங்கலாம்.

Fujifilm இன் திறன் மூலம் இயங்கும் எமது ரேடியாலஜி அடிப்படையிலான நோய்த் தடுப்புப் பரிசோதனைகள், நாம் பாரம்பரியமாக கொண்டுள்ள ஆழமான கற்றல் மற்றும் புகைப்படவியல் செயலாக்கத்தின் இணைப்பை பயன்படுத்துகின்றன. இந்த பரிசோதனைகள் உங்களது ஊழியர்களுக்கு பொதுவான புற்றுநோய்கள் மற்றும் வாழ்வியல் நோய்களுக்கான சுகாதார ஆபத்துகளை அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே கண்டறிய உதவுகின்றன. சுருக்கமாக கூறினால், வருமுன் காப்பதே எப்போதும் சிறந்தது!

ஆரம்பக்கட்ட கண்டறிதலானது உங்களது ஊழியர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும், நோய்களைத் தடுக்கவும் அல்லது வெற்றிகரமான மற்றும் செலவு குறைந்த சிகிச்சையைப் பெறவும் அனுமதிக்கிறது.

ஒரு நிறுவனமாக இது உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளது?

ஊழியர்களே ஒரு நிறுவனத்தின் மிகப்பெரும் சொத்தாகும். Active-AI பரிசோதனையானது உங்களது ஊழியர்கள் சுகாதார ஆபத்துகளால் திடீரெனப் பாதிக்கப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட உதவுகிறது. இது நோய் காரணமாக பணிக்கு சமுகமளிக்காமையை குறைத்து, உங்களது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே நேரத்தில், உங்களது ஊழியர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தி, அவர்களிடமான உங்கள் உறவின் உணர்வை மேம்படுத்துகிறது. நோய்த் தடுப்புப் பரிசோதனையின் அவசியத்தையும் அதன் பெறுமதியையும் உணர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள் இந்த உலகளாவிய சுகாதார விடயத்தில் பங்கேற்க தமது ஊழியர்களை ஊக்குவித்து வருகின்றன.

இது உங்களது ஊழியர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

முறையான AI நோய்த் தடுப்புப் பரிசோதனை முறையானது உங்களது ஊழியர்களுக்கு அவர்களின் சுகாதார நிலை குறித்த துல்லியமான தகவல்களை வழங்குகிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்ளவும், வெற்றிகரமான சிகிச்சையைப் பெறவும், தங்களது முழுத் திறனுக்கேற்ப செயற்படவும் அவர்களை ஊக்குவிக்கிறது.

Start your Corporate
 Health Journey

உங்களது விபரங்களை பூர்த்தி செய்வதன் மூலம், நிறுவன சுகவாழ்வு தொடர்பான எமது குழு ஒரு வேலை நாளுக்குள் பிரத்தியேகமான பரிந்துரையுடன் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

NURA உடன் உங்களது நிறுவனத்தின் சுகாதாரப் பயணத்தை ஆரம்பிக்க இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.


கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

  • NURA என்பது இலங்கையின் முதலாவது AI தொழில்நுட்பத்தால் இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல., சுகாதாரப் பரிசோதனை மையமாகும். இது Fujifilm மற்றும் Dr. Kutty's Healthcare ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் FUJIFILM DKH நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரிவான பரிசோதனைகளை வழங்குகிறது. இந்தப் பொதுவாக 120 நிமிடங்களில்பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைவதுடன், நிகழ்நேர மருத்துவர் ஆலோசனையும் Digital Health Report-உம் வழங்கப்படுகின்றன.

  • NURA-வின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் நிறைவடைகின்றன. இதில் AI-assisted Imaging, விரிவான ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகியவை அடங்கும். நீங்கள் மையத்தை விட்டுச் செல்வதற்கு முன்பே உங்கள் Digital Health Report தயாராகிவிடும்.  

  • NURA, வாழ்க்கைமுறை சார்ந்த முக்கிய தொற்றா நோய்கள் (NCDs) மற்றும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளைப் பரிசோதிக்கிறது. இதில் வாய், நுரையீரல், மார்பகம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், புரோஸ்டேட், கருப்பை முட்டைப்பை, கருப்பை வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் அடங்கும். தேர்ந்தெடுக்கப்படும் Package-ஐப் பொறுத்து புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மாறுபடும். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விரிவான Packages-இல் அவர்களுக்கு உரிய புற்றுநோய் வகைகளுக்கான பரிசோதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • முன்கூட்டியே கவனம் செலுத்தி, தடுப்பு சுகாதாரப் பராமரிப்பின் மூலம் தங்களுடைய உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேண விரும்பும் அனைவருக்காகவும் NURA வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது நோய் கண்டறியப்பட்டிருந்தாலோ, முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். 

  • NURA உங்கள் உடல்நிலை குறித்த ஆழமான புரிதலை வழங்குகிறது. AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட Ultra-Low-Dose CT Imaging, முக்கிய வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களுக்கான பரிசோதனைகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பொதுவாக 120 நிமிடங்களில்Screening மற்றும் நிகழ்நேர மருத்துவர் ஆலோசனை ஆகிய அனைத்தையும் NURA ஒருங்கிணைக்கிறது. இந்தப் பரிசோதனைகள் பொதுவாக 120 நிமிடங்களில் மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து NURA மருத்துவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். NURA சிகிச்சை வழங்குவதோ மருந்துகளைப் பரிந்துரைப்பதோ இல்லை. 

  • இல்லை. NURA என்பது தடுப்பு சுகாதாரப் பரிசோதனைகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையமாகும். இது மருத்துவமனையோ, கிளினிக்கோ அல்லது சிகிச்சை வழங்கும் நிலையமோ அல்ல.தங்களுடைய உடல்நலத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்த விரும்பும் பெரியவர்களுக்கான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளில் மட்டுமே NURA கவனம் செலுத்துகிறது. மேலும் மருத்துவக் கவனம் தேவைப்படும் ஏதேனும் பிரச்சினை பரிசோதனையில் கண்டறியப்பட்டால், தகுந்த நிபுணத்துவ சிகிச்சை வழங்குநர்களை அணுகுவதற்கான அடுத்தகட்ட வழிமுறைகளை NURA மருத்துவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள். 

  • NURA சுகாதாரப் பரிசோதனைகளுக்கான கட்டணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் Package-ஐப் பொறுத்து மாறுபடும்.உங்களுக்கு விருப்பமான Package-க்கான தற்போதைய கட்டண விவரங்களை அறிந்துகொள்ள NURA Sri Lanka இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது NURA குழுவினரைத் தொடர்புகொள்ளவும்..