NURA AI சுகாதாரப் பரிசோதனைத் தொழில்நுட்பம்
எமது அதிநவீன மருத்துவ புகைப்படவியல் உபகரணங்கள் துல்லியமான, வசதியான மற்றும் பாதுகாப்பான பரிசோதனையை மேற்கொள்ள உதவுகின்றன

உங்கள் பரிசோதனை அனுபவத்தை மேம்படுத்த நுண்ணறிவுள்ள AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
இந்தியாவின் முதலாவது AI இனால் இயங்கும் நோய்த் தடுப்புச் சுகாதாரப் பரிசோதனை மையமான NURA வில், பரிசோதனை அனுபவத்தின் ஒவ்வொரு அம்சமும் உங்களது சௌகரியம், வசதி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பம் வேகமான மற்றும் துல்லியமான பெறுபேறுகளைச் சாத்தியமாக்கும் அதே வேளையில், எமது குறைந்தபட்ச உட்செலுத்தல் பரிசோதனை முறைகள் தடையற்ற சிறந்த அனுபவத்தை உறுதிப்படுத்த உதவுகின்றன. கவனமாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் சீரமைக்கப்பட்ட நடைமுறைகளும் நோய்த் தடுப்புச் சுகாதாரப் பராமரிப்பைத் திறனாகவும், வசதியாகவும், உங்களது வேலைப்பளு மிக்க கால அட்டவணைக்குப் பொருத்தமானதாகவும் மாற்றுகின்றன.


பாதுகாப்பானது • துல்லியமானது • வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்
பொதுவாக CT ஸ்கேன் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி ஸ்கேன், சாதாரண எக்ஸ்ரேயை விட உள் உறுப்புகளை மிகவும் விரிவாகப் பார்க்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. இது உங்கள் உடலைச் சுற்றிலும் பல்வேறு கோணங்களில் எக்ஸ்ரே படங்களை எடுத்து, ஸ்கேன் செய்யப்பட்ட உடற்பகுதியின் பல குறுக்குவெட்டுப் படங்களை (slices) உருவாக்க அவற்றை ஒன்றாகச் செயலாக்குகிறது.

உங்கள் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
எமது CT ஸ்கேன் இயந்திரங்கள் பரிசோதனை நடைமுறையை முடிந்தவரை வசதியானதாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அடைபட்ட இடத்தைப் பற்றிய பயத்தைக் (claustrophobia) குறைக்கவும் உங்களது பதற்றத்தைத் தணிக்கவும் எமது இயந்திரத்தின் நுழைவுப் பகுதி (gantry bore) மற்ற இயந்திரங்களை விடப் பெரியதாக உள்ளது.

அதிவேக ஸ்கேனிங்கின் துல்லியம்
எமது அதிவேக ஸ்கேனிங் காரணமாக நீங்கள் 7-8 வினாடிகள் மட்டுமே மூச்சை அடக்க வேண்டியிருக்கும். திறமையான மற்றும் துல்லியமான பரிசோதனைக்கு விரைவான கவரேஜை வழங்கும் அதிநவீன 3D புனரமைப்பு (3D reconstruction) தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

குறைந்த அசௌகரியம் • துல்லியம் • வெறும் 10 நிமிடங்களில்
டிஜிட்டல் மெமோகிராபி என்பது மார்பக ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்காக மார்பக இழையங்ளை ஸ்கேன் செய்யும் ஒரு நோய்த் தடுப்புப் பரிசோதனையாகும். பரிசோதனைக்கான மிகச்சிறந்த படங்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு மார்பகமும் மிக உணர்திறன் கொண்ட தட்டையான டிஜிட்டல் பேனலுடன் தனித்தனியாக அழுத்தச் செய்யப்படுகிறது.

மேலதிக வசதிக்கான நெகிழ்வான அமைப்பு

துல்லியமான பரிசோதனை
மார்பகத்தின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகப் பரிசோதிக்க, AI தொழில்நுட்பத்துடன் கூடிய 2D புகைப்படவியலை நாம் பயன்படுத்துகிறோம். பரிசோதனையின் போது,
மெமோகிராபி இயந்திரமானது மார்பகத்தைச் சுற்றி ஒரு வில் வடிவத்தில் நகர்ந்து, வெவ்வேறு கோணங்களில் எக்ஸ் கதிர் படங்களை எடுக்கிறது. கூர்ந்து ஆராய வேண்டிய பகுதிகளை மருத்துவர்கள் கண்டறிய உதவும் வகையில் இந்தப் படங்கள் புத்திசாலித்தனமாகப் புனரமைக்கப்படுகின்றன. சாதாரண மெமோகிராபியில் இழையங்கள் ஒன்றன் மேல் ஒன்று மறைப்பதால் அசாதாரண நிலைமைகளைக் கண்டறிவது கடினமாகும். ஆனால் இந்த முறையின் மூலம் அசாதாரண நிலைமைகளை மிக எளிதாகக் கண்டறிய முடியும்.மார்பகத்தின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகப் பரிசோதிக்க, AI தொழில்நுட்பத்துடன் கூடிய 2D புகைப்படவியலை நாம் பயன்படுத்துகிறோம்.
பரிசோதனையின் போது, மெமோகிராபி இயந்திரமானது மார்பகத்தைச் சுற்றி ஒரு வில் வடிவத்தில் நகர்ந்து, வெவ்வேறு கோணங்களில் எக்ஸ் கதிர் படங்களை எடுக்கிறது. கூர்ந்து ஆராய வேண்டிய பகுதிகளை மருத்துவர்கள் கண்டறிய உதவும் வகையில் இந்தப் படங்கள் புத்திசாலித்தனமாகப் புனரமைக்கப்படுகின்றன. சாதாரண மெமோகிராபியில் இழையங்கள் ஒன்றன் மேல் ஒன்று மறைப்பதால் அசாதாரண நிலைமைகளைக் கண்டறிவது கடினமாகும். ஆனால் இந்த முறையின் மூலம் அசாதாரண நிலைமைகளை மிக எளிதாகக் கண்டறிய முடியும்.

Fujifilm AI தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு என்பது சுகாதாரத் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட மிகப் பாரிய முன்னேற்றமாகும் என்பதுடன், Fujifilm இந்த பாதையில் முன்னணியில் திகழ்கின்றது. உயர்தர ஸ்கேனிங் மற்றும் புகைப்படவியல் செயலாக்கத்தில் எமது பாரம்பரியம், பல தசாப்தகால புகைப்படவியல் தரவுகளுடன் AI கட்டமைப்புகளுக்குப் பயிற்சியளிக்க எமக்கு உதவுகிறது.
எமது AI தொழில்நுட்பம் பரிசோதனை நடைமுறையை மிகவும் பாதுகாப்பானதாகவும் துல்லியமானதாகவும் மாற்றுவதன் மூலம் நோயாளி மற்றும் மருத்துவர் ஆகிய இருவருக்குமான பெறுபேறுகளை மேம்படுத்துகிறது.
- Fujifilm சுகாதார பராமரிப்பு பல தசாப்த கால புகைப்படவியல் தரவுகள்
- மிகக் குறைந்த CT கதிர்வீச்சு ஒரு ஸ்கேனுக்கு 0.1 mSv மட்டுமே
- REiLI ஆழ்ந்த கற்றல் அசாதாரண நிலைமைகளை தன்னியக்கமாக அறிதல்
- அதே தினத்திலான அறிக்கைகள் எளிதில் வாசித்து அறியக்கூடிய முடிவுகள்
120 நிமிடங்கள்*
முழு உடல் ஸ்கேன் + அறிக்கை
மூன்று அடுக்குகளிலான நுண்ணறிவுப் பரிசோதனை
மூல கட்ட ஸ்கேன் தரவிலிருந்து செயற்படுத்தக்கூடிய தகவல்கள் வரை — எமது AI கட்டமைப்பு Fujifilm இன் பல தசாப்த கால புகைப்படவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (Ai)
இயந்திரக் கற்றல் (ML)
எமது இயந்திரங்கள் மில்லியன் கணக்கான புகைப்படவியல் தரவுப் புள்ளிகளைச் சேகரித்து, வகைப்படுத்தி, பரிசீலிப்பதன் மூலம் கணிப்புகளை தொடச்சியாக மேம்படுத்துகின்றன.
ஆழ்ந்த கற்றல் (DL)

இயந்திரத்தினுள் உள்ள AI தொழில் நுட்பத்தை அறியுங்கள்
கண்டறிதல் மற்றும் புகைப்படத் தரத்தை மேம்படுத்த இரண்டு பிரத்தியேக Fujifilm AI தொகுதிகள் இணைந்து செயற்படுகின்றன
REiLI என்பது எமது AI தொழில்நுட்பமாகும். இது அசாதாரண நிலைமைகளைத் தானாகவே கண்டறிய ஆழ்ந்த கற்றல் மற்றும் Fujifilm இன் பரந்த புகைப்படவியல் செயலாக்கத் தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட பகுதியைத் துல்லியமாகக் கண்டறிய மருத்துவர்களுக்கும், ஸ்கேனை விளக்குவதற்கு கதிரியக்கவியலாளர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
FCT PixelShine என்பது குறைந்த கதிர்வீச்சு ஸ்கேன்களின் புகைப்படத் தரத்தை மேம்படுத்தும் ஆழ்ந்த கற்றல் அடிப்படையிலான புகைப்பட செயலாக்க மென்பொருளாகும். தெளிவான புகைப்படங்கள் முன்னர் அதிக அளவிலான கதிர்வீச்சு மூலம் மட்டுமே சாத்தியமாக இருந்தது. FCT PixelShine ஆனது மிகக் குறைந்த கதிர்வீச்சிலும் தெளிவான, கூர்மையான புகைப்படத்தை உருவாக்க எமது இயந்திரங்களுக்கு உதவுகிறது.
How low is ultra-low radiation?
Based on lung cancer CT scan at ultra-low-dose
- 1/50x
radiation than regular imaging machines
- BLR - NYC
equal to a round trip flight from Bangalore to New York
மிகமிகக் குறைந்த கதிர்வீச்சுடன். தெளிவான விபரங்கள்
Fujifilm Healthcare கதிரியக்க புகைப்படங்களின் பரந்த தரவுத்தளமும், இத்துறையில் உள்ள பல தசாப்த கால அனுபவமும், கதிரியக்கவியலாளர் மற்றும் மருத்துவர்களுக்கு அதிகாரமளிக்கின்ற, மேம்பட்ட AI தொழில்நுட்பங்களை உருவாக்க எமக்கு உதவியுள்ளன.
எமது AI ஸ்கேன்களை மிகவும் திறம்படவும் துல்லியமாகவும் அறிய அவர்களுக்கு வழிவகுப்பதோடு, விரைவான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.AI தொழில்நுட்பம் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் பரிசோதனை நடைமுறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. தெளிவான புகைப்படங்கள் முன்னர் அதிக கதிர்வீச்சு மூலம் மட்டுமே சாத்தியமாக இருந்தது.
எமது AI தொழில்நுட்பம் குறைந்த கதிர்வீச்சு ஸ்கேனை செயலாக்குவதுடன், Fujifilm இன் பரந்த புகைப்படவியல் தரவுத்தள நூலகத்தில் உள்ள ஒத்த ஸ்கேன்களுடன் ஒப்பிட்டு நோக்குகிறது. இது குறைந்த கதிர்வீச்சு புகைப்படத்தை மேம்படுத்தவும், வெற்றுக் கண்ணால் தவறவிடக்கூடிய சிக்கல்களைக் கண்டறியவும் உதவுகிறது.

மிகக் குறைந்த கதிர்வீச்சு ஸ்கேன்

அதிக கதிர்வீச்சு ஸ்கேன்
அதிக கதிர்வீச்சுடன் எடுக்கப்படும் அதே ஸ்கேன் அசாதாரண நிலைமைகளை வெளிப்படுத்துகிறது.

AI இனால் மேம்படுத்தப்பட்ட மிகக் குறைந்த கதிர்வீச்சு ஸ்கேன்
எமது AI தொழில்நுட்பம், ஆரம்பகட்ட கண்டறிதலில் மருத்துவருக்கு உதவ மிகக் குறைந்த கதிர்வீச்சு ஸ்கேனின் தரத்தை மேம்படுத்துகிறது.
கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!

கேள்விகள் உள்ளனவா? உங்களுக்கான பதில்கள் எங்களிடம் உள்ளன!
- NURA-வில் AI சுகாதாரப் பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது
NURA-வில், மேம்பட்ட Software தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவப் படங்களை மேம்படுத்த AI பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருத்துவர்கள் பரிசோதனையின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு தெளிவாக மதிப்பிட முடிகிறது. AI உதவியுடன் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு கண்டறிதலும் (AI-Assisted Findings), பரிசோதனை முடிவுகள் உங்களுடன் பகிரப்படுவதற்கு முன்பு NURA-வின் தகுதிபெற்ற மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பொதுவாக, ஒரே 120 நிமிட வருகையின்போது மருத்துவருடனான Consultation மற்றும் Digital Health Report உடன் உங்கள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன.
- REiLI AI தொழில்நுட்பம் என்றால் என்ன?
REiLI என்பது Fujifilm-இன் Medical Imaging AI தொழில்நுட்பமாகும். Fujifilm-இன் விரிவான Medical Imaging Database மூலம் பயிற்றுவிக்கப்பட்ட Deep Learning தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய Scan-களில் உள்ள வடிவங்கள் மற்றும் மாற்றங்களை அடையாளம் காண இது உதவுகிறது. இதன் மூலம் Radiologists மருத்துவப் படங்களை மேலும் திறமையாக மதிப்பாய்வு செய்ய முடிகிறது. NURA-வில், மருத்துவர்களின் மதிப்பாய்வுச் செயல்முறைக்கு REiLI உதவுகிறது. பரிசோதனையில் கண்டறியப்படும் அனைத்து விடயங்களும் உங்களுடன் பகிரப்படுவதற்கு முன்பு தகுதிபெற்ற மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன.
- மருத்துவர்களை விட AI-ஆல் புற்றுநோயைச் சிறப்பாகக் கண்டறிய முடியுமா?
AI மற்றும் மருத்துவர்கள் இணைந்து செயல்படும்போதே சிறந்த முடிவுகளை வழங்க முடியும். இந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டே NURA உருவாக்கப்பட்டுள்ளது. AI-Assisted Imaging மூலம் வழக்கமான மதிப்பாய்வின்போது எளிதில் கண்டறிய முடியாத ஆரம்பகட்ட அபாயக் குறிகாட்டிகளை மருத்துவர்கள் அடையாளம் காண முடியும். மேலும், ஆயிரக்கணக்கான மருத்துவப் படங்களை ஒரே சீரான முறையில் பகுப்பாய்வு செய்யவும் AI உதவுகிறது. இருப்பினும், Screening தொடர்பான மருத்துவ மதிப்பீடு, நோயாளியின் உடல்நிலை தொடர்பான முழுமையான பின்னணி மற்றும் Consultation ஆகியவை தகுதிபெற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. NURA-வில், பரிசோதனை முடிவுகள் உங்களிடம் வழங்கப்படுவதற்கு முன்பு AI உதவியுடன் கண்டறியப்படும் ஒவ்வொரு விடயமும் மருத்துவக் குழுவினரால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
- AI சுகாதாரப் பரிசோதனை எந்த அளவிற்குத் துல்லியமானது?
NURA-வின் Screening, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இறுதியான மருத்துவ நோயறிதலை (Diagnosis) வழங்குவதற்கான மாற்றீடு அல்ல. எந்தவொரு Screening முறையாலும் அனைத்து நோய்களையும் கண்டறிய முடியாது. AI-Assisted Imaging மூலம் ஆரம்பகட்ட உடல்நல அபாயக் குறிகாட்டிகளை மருத்துவர்கள் அடையாளம் காண முடிகிறது. பரிசோதனை முடிவுகள் உங்களுடன் பகிரப்படுவதற்கு முன்பு அனைத்து கண்டறிதல்களும் NURA-வின் மருத்துவக் குழுவினரால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. உங்கள் Screening-இல் கவனம் செலுத்த வேண்டிய ஏதேனும் பகுதி அடையாளம் காணப்பட்டால், NURA மருத்துவர்கள் அதனைத் தெளிவாக விளக்கி, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் Specialist Care தொடர்பாக உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
- Ultra-Low-Dose CT Scan என்றால் என்ன?
Ultra-Low-Dose CT என்பது வழக்கமான CT Imaging முறைகளுடன் ஒப்பிடும்போது, மருத்துவப் படங்களின் தரத்தைப் பேணியபடியே கணிசமாகக் குறைந்த கதிர்வீச்சு அளவைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட Computed Tomography Scan முறையாகும். NURA, AI-Supported Image Processing தொழில்நுட்பத்துடன் கூடிய Fujifilm Ultra-Low-Dose CT Systems-ஐப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் விரிவான மருத்துவப் படமெடுப்பை வருடாந்திர Preventive Health Screening-இன் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்த முடிகிறது.
